Tuesday, 7 August 2018

நல்லவர் யார்?

நல்லவர் யார்?

தமிழகம் சேணம் இல்லா தறிகெட்ட குதிரை நிலையில் உள்ளது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் ஆக முயற்சி. என்னவோ 50 ஆண்டு காலமாக தமிழகம் செழித்து வளர்ந்தது போலவும் இப்போது நாடு நாசமாகி நாறி போனது போலவும் ஒரு பிரமை ஏற்படுத்தப் பட்டு உள்ளது.

கொஞ்சம் பின்னோக்கி பாப்போம். வரலாறு என்ன சொல்கிறது? ஒரு குடும்பத்தின் பேராசை காரணமாக நாடு கொள்ளை அடிக்கப்பட்டு மக்கள் வளம் சூறையாடப்பட்டது. தலைமையின் சித்தாந்தம் அவர்கள் குடும்பத்தாலேயே பின்பற்றப்படவில்லை. சனாதன தர்மம் நசுக்கப் பட்டு அயல் நாட்டு மார்க்கங்கள் வெண்சாமரம் வீசப்பட்டு வரவேற்கப்  பட்டது. காரணம் கோடி கோடியாக கொட்டி கொடுக்கப் பட்டது.

இறைவன் இல்லை என்று சித்தாந்தம் பேசும் தலைமை மாற்று மார்கங்களின் விழாக்களில் பங்கேற்பது எதற்கு? அப்போ அவர்களின் கடவுள்களை இவர் கடவுளாக ஏற்க வில்லை என்று அர்த்தம். இது தெரியாமல் கோடியில் கொட்டி கொடுத்து ஏமார்ந்து போனது யார்?  இந்துக்களுக்கு துரோகம் செய்து, பிற மார்க்கத்தவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தது தான் தலைமையின் சாதனை. 

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் - "ப்ரீயா கொடுத்தால் பினாயில் கூட சாப்பிடுவார்கள்". பொய்யும் புரட்டும் சொல்லி, போதையில் மக்களை வைத்து, அவர்கள் உழைப்பை உறிந்து  சுயநலமாய் சொத்து சேர்த்தது  தான் தலைவரின் சாதனை.

அரசியல் பொன்விழா கண்ட நாயகர் நாட்டுக்கு செய்தது என்ன? தனது  கட்சி சங்கர மடம் இல்லை என்றார். ஆம் சங்கர மடம்  இல்லை தான். அங்கு உங்கள் கட்சி போல ஒரு குடும்பத்து ஆக்ரமிப்பு இல்லை. பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப் பட்டு, பொதுநலம் ஒன்றே நோக்கமாக கொண்டு செயல் படுபவர்கள் அவர்கள். உங்களை போல் நரகலில் கூட நயா பைசா தேடும் நய வஞ்சகம் இல்லை.

தமிழனுக்கே உண்டான பண்பாடு, அன்பு, ஒழுக்கம், இறை பக்தி, விருந்தோம்பல் இவை எதுவுமே  இல்லாத நீங்கள் உங்களை எப்படி தமிழின தலைவனாக சொல்லிக் கொள்ள இயலும்? உங்களது படைப்புகளை கொண்டு நீங்கள் ஒரு தமிழ் அறிஞர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர, தமிழ் இனத்திற்கு தலைவராக உங்களை ஏற்கவே முடியாது. ஒரு தலைவன் என்பவன் தனது குடிமக்களிடம் பார பட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கோ, ஜாதி சண்டை, மத சண்டை வளர விட்டு அதில் குளிர் காய்வது என்பது பொழுது போக்கு. மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணக்கும் என சொல்லி, ஒழுக்கக் கேட்டுக்கு முழு உதாரணமான நீங்கள்,  ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் கொண்டவர். இந்துக்கள் என்றால் இளக்காரம். கடவுள் இல்லை என்று காட்டுக் கூச்சல். ஆனால் சுக்ர ப்ரீத்தி மட்டும் செய்யலாம். வேத விற்பன்னர்கள் கொண்டு வீட்டில் வேதம் ஓதலாம். கேக்குறதுக்கு கோடானு கோடி கேனை பயல்கள் இருந்தால் சொல்பவனுக்கு என்ன?

தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் இவரது தமிழ் பற்று இவர் குடும்பத்தாரின் எந்த பெயரிலும் பிரதி பலிக்க வில்லை. இவர் குடும்பத்தின் எந்த தொழிலிலும் பிரதி பலிக்க வில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்வோம் ஆனால் மத்தியில் ஆட்சி என்றால் ஹிந்தி பேசும் கட்சியுடன் கூட்டு சேர்வோம். எங்கள் குடும்பத்து குல வாரிசுகள் ஹிந்தி கற்கும் ஹிந்தி பேசும்.

கார்பொரேட் சதி என்று பேசும் அவர் குஞ்சுகள், அவரது வாரிசுகள் பத்திரிக்கை, ஊடகம், மருத்துவம், வானூர்தி இன்னும் பல துறைகளில் அடாவடி செய்து யாரையும் வளரவிடாமல் தன் குடும்பம் மட்டும் கோலோச்ச வழி செய்ததை அவரது சாதனைகள் என்று புகழலாம். பல கோடிகள் குவித்தவர் செல்லும் பொழுது என்ன கொண்டு செல்கிறார்?

இறைவன் மிக பெரியவன். எல்லாவற்றிற்கும் அப்பாற் பட்டவன். அவனுக்கு தெரியும் யாருக்கு  எப்போது என்ன தரவேண்டும் என்பது. பிறப்பு இறப்பும் அவன் கையில் உள்ளது. காசு கொடுத்து குவாட்டரும் கோழி பிரியாணியும்  கொடுத்து கூட்டம் சேர்க்கலாம். முட்டாள் கூட்டம் சேரக்கூடாத இடம் சேர்ந்து தனது முகவரியை தொலைத்ததுதான் மிச்சம்.

ஒவ்வொரும் ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இதுதான் இயற்கையின் நியதி. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் கழகம் கலகம்  கண்டு கலகலத்து விடும்.

நீதி அரசர் மார்க்கண்டேய கட்ஜு  கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா. திருட்டு ரயில் ஏறி வந்தவர் இன்று பல லக்ஷம் கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி? தலைவர் குடும்பம் இதற்கு பதில் கூறுமா?

 தான் மட்டுமே உலகில் உத்தமன் போலவும் மீதி எல்லாரும் அயோக்கியர்கள் போலவும் பேசுபவரை தற்குறி என்று தானே சொல்லுவார்கள்?  தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவரை ஒழித்தது, கட்சியை குடும்ப சொத்து ஆக்கியது, வாரிசு அரசியல் செய்தது, மக்கள் வயிற்றில் அடித்தது, எதிர் கட்சி தலைவரை சட்ட சபையில் வைத்து மானபங்கப்  படுத்தியது, தமிழ் மக்களை ஹிந்தி படிக்க விடாமல் கிணற்று தவளையாய் வைத்தது,  ப்ராஹ்மணர் துவேஷம், கள்ளக்காதல், மாற்று மதத்தவரிடம் காசு வாங்கி இந்து கோவில்களை சூறை ஆடியது, சிலை கடத்தல், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூத சக்திகளையும் கொள்ளை அடித்தது என இவர் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

என் மனைவி, என் மகளின் தாயாகிய மற்றொரு மனைவி, என் மருமகள், என் பேரனின் மனைவி, என் பேரன், என் மற்றோரு மகன், அவர் மனைவி எல்லாரும் கோவிலுக்கு செல்வார்கள் இது அவர்களின் உரிமை ஆனால் தமிழ் மக்கள் இந்துக்கள் கோவிலுக்கு சென்றால் குற்றம். இந்து கோவில்களை கொள்ளை அடிப்பேன் என்ற உயர்ந்த சித்தாந்தம் கொண்டவர். பண்டைய அரசர்கள் கட்டிய கோவில்களை அரசு துறை மூலம் எடுத்து தனது குஞ்சுகளை கொண்டு கொள்ளை அடித்து பாழடையவைத்து மாற்று மதக் காரனுக்கு சொம்பு தூக்கியத்தில் அவருக்கு நிகர் அவர் தான்.

தெய்வம் நின்று கொல்லும். நிச்சயம் கொல்லும் ........ பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் நொடிப் பொழுதில் சரிந்து விழுந்து இருக்கிறது. பொறுத்திருப்போம்.... காலம் பதில் சொல்லும்.