Monday 23 July 2018

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் கதை

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் கதை 

ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். வெளியே ஒரு ஒட்டகம் படுத்து இருந்தது.  இரவு அதிக குளிர். குளிர் தாங்காமல் ஒட்டகம் சிறிது மூக்கை உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

இன்று இந்துக்களின் நிலையும் இதேதான். சனாதன தர்மத்தின் கோட்பாடுகளின் படி நாம் அளவுக்கு அதிகமான பொறுமை காத்து விட்டோம். மூக்கு மட்டும் தானே என்று இடம் கொடுத்தது போக, நமக்கே இடம் இல்லாமல் ஒட்டகம் செய்து விடும் போல இருக்கிறது.
இந்தியா முழுவதும் இந்த ஒரு நிலைமை இருக்கிறது என்றாலும், தமிழகத்தில் நிலைமை மிக மோசம். ஒருபுறம் மக்களின் ஆன்மீக தேடல் அதிகரித்து இருக்கும் நேரத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் கூடும் கூட்டமும் அதிகமாக தான் உள்ளது.

இலவசங்களுக்கு அடிமையாகி தமிழ் மக்கள் சுய அறிவை இழந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. சிலர் என்னவோ தாங்கள் தான் தமிழ் நாட்டையே காக்கவந்தவர்கள், நாங்கள் தமிழ் போராளிகள் என்று தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டு  மக்களை ஏமாற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.

நாட்டுக்கு வரவேண்டிய நல்ல திட்டங்களையும் அரசின் நல்ல செயல்பாட்டையும் முட்டு கட்டை போடுவதுதான் போராளிகளின் வேலை என்றால், அப்படி பட்டவர்களை முகவரி தெரியாமல் செய்வது தான் தமிழ் மக்கள் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியம் ஆகும். மக்களை தூண்டி விட்டு போராட்டம் என்ற பெயரில் கயவர்கள் தங்கள் நோக்கத்தை நிறை வேற்றி கொண்டு விட்டனர். தூத்துக்குடி சம்பவமும், அதை தொடர்ந்த மீனவ சமூகத்தின் கருத்துக்களும் இதை தான் தெளிவு படுத்துகிறது. மத போதகர்கள் என்ற போர்வையில் தீவிர வாதம் வளர்க்கும் பலரை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இத்துணை ஆண்டுகள் முகவரி இல்லாமல் இருந்த இந்த திடீர் போராளிகளுக்கு பணம், பொருள் கொடுத்து ஊக்குவிப்பது யார்? யார் இவர்களின் பின்புலத்தில் இருக்கிறார்கள். வெளிநாட்டு பணம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? இதற்கெல்லாம் விடை உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரியும். 

சமீபத்தில், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் புத்தகமும் அதில் அவர் தெரிவித்துள்ள விஷயங்களும் காஞ்சி மடாதிபதி மேல் ஏவி விடப்பட்ட அராஜகங்களும்  வெட்ட வெளிச்சம் ஆகின. காரணம் மத மாற்றம் செய்பவர்களின் நோக்கம் நிறைவேற தடையாய் அவர் இருந்ததுதான் காரணம். இதில் வேதனைக்கு உரிய விஷயம் என்ன என்றால், தெய்வ பக்தி உள்ள அரசியல் தலைவர்களும் தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக மனசாட்சியை அடமானான் வைத்ததுதான்.

வாரிசு அரசியல் பார்த்து பழகிய இந்திய மக்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடு முன்னேற்றம் அடைய கொண்டுவரப்பட்ட திட்டங்களால் அதிர்ச்சி அடைந்ததை விட ஆச்சரியம் அடைந்ததே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய முன்னேற்ற திட்டங்கள் ஏன் கடந்த 50 ஆண்டுகளாக கொண்டு  வரப்பட வில்லை என்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்கும் கேள்வி. தனது என்று எதுவும் கொள்ளாது தேச நலன் ஒன்று தான் முக்கியம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் முன்பு ஆண்ட தலைவர்களுக்கு ஏன் தோன்ற வில்லை என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக தான்  பொது மக்களுக்கு உள்ளது. 

2019இல் நாங்கள் சாதித்துவிடுவோம் என்றும் வாரிசு மார் தட்டுகிறார். அவரது கனவு பலிக்குமா என்பது அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவரை நம்பி நாட்டை ஒப்படைக்க எந்த ஒரு தேச பற்று மிக்க இந்திய குடிமகனும் தயாராக இல்லை என்பது நான் எனது பல மாநில பயணங்களின் போது  அறிந்து கொண்டேன். எனது நண்பர் ஒருவர் சொன்னார், எங்களுக்கு காமெடியன்களை பிடிக்கும் ஆனால் அவர்களை ஹீரோவாக ஆக்க முடியுமா? என்று. அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. 

இப்போது இருக்கும் தலைமை நன்றாகத்தானே செயல் படுகிறது, கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் பற்றிய பேச்சே இல்லையே? நாட்டின் பொருளாதாரம், விலைவாசி, அந்நிய முதலீடு, வெளியுறவு கொள்கை, ரயில்வே, மின்சாரம், பொதுப்பணி  இப்படி ஓவொரு துறையிலும் சிறப்பை தானே பார்க்கிறோம். அப்படி இருக்கையில், நாம் ஏன் மாற்றத்தை எதிர் நோக்க வேண்டும். அதுவும் கடந்த காலத்தில் ஒரு மோசமான ஆட்சியை கொடுத்த ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? ஓவ்வொரு இந்திய குடிமகனும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

நல்லது செய்யும் ஒருவர் மீது சேற்றை வாரி இறைப்பதற்கு என்று ஒரு கூட்டம், அதற்கு பின்புலம் அந்நிய சக்திகள் இருப்பதும் அவர்கள் பணத்தை வாரி இறைத்து பல ஊடகங்களை விலைக்கு  வாங்கி ஊடுருவி இருப்பதும் ஆண்டாள் விவகாரத்திலும், அதன் பிறகு நடந்த நிறைய இந்து மதம் சார்த்த விஷயங்கள் ஊதி பெரிதாக்கப் பட்டதும், பொய்யான தகவல்கள் பரப்பப் பட்டதும் நாட்டு மக்கள் அறிந்த விஷயம். இந்து மதம் மட்டுமே குறி வைத்து பொய்யான தகவல்களை பரப்புவதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம்.  இது ஒட்டகத்தின் கதையாகத்  தான் நமக்கு தோன்றுகிறது. சமூக ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காசு கொடுத்து மீம்களை போட ஒரு கூட்டத்தை விலைக்கு வாங்கியிருக்கும் இந்து மத வெறுப்பாளர்கள் தாங்கள் சாதித்து விட்டதாக பகல் கனவு காண்கிறார்கள். இவர்கள் செய்த வேசித்தனம் மக்களுக்கு தெரியவில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களையும் அறியாமல் இவர்கள் செய்த ஒரு நல்ல காரியம் இந்து சமய பற்றுள்ளவர்களை எல்லாம் ஒரு அணியில் சேர செய்திருப்பதுதான்.

தமிழகத்தில் மாற்று அரசியல் வராதா என்று ஏங்கி இருந்த மக்களுக்கு விடிவெள்ளியாக ஒருவர் வந்தது போல இருந்தது. பகுத்தறிவு வாதி என்று தன்னை அறிவித்துக் கொண்டாலும், அவரது அபிமானிகள் அவரை "ஆண்டவர்" என்று அழைப்பதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. ஆனாலும் வந்த ஓரிரு மாதத்தில் இவரது சாயம் வெளுத்தது. கமலமாக இருந்த அவர் தான் மலம் என்று நிரூபிப்பது போல் அவரது பேச்சுக்களும், செயல்களும் இருக்கிறது. அடுத்தவர் ஆன்மிகம் கொண்டு அரசியல் செய்வார் என்ற எதிர் பார்ப்பு கொஞ்சம் மக்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அவர் எப்போ வருவாரோ?

தமிழகத்தை மாநில கட்சி தான் ஆளும் என்று பல அரசியல் வாதிகள் நிச்சயமாக நம்புகிறார்கள். ஆனால் காலம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பது யாருக்கு தெரியும். மாற்றம் ஒன்று தான் மாறாதது, இதுதான் உலக நியதி.

மக்கள் மனதில் நல்ல நாள் எப்போது வரும், நாட்டுக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும் என்பது தான் இப்போது இருக்கும் எதிர்பார்ப்பு.

நம் வாழ்க்கை நம் கையில். கையில் (மை) கறை கொண்டு களை  எடுப்போம். நல்ல தலைவரை தேர்ந்து எடுப்போம். 

இன்னும் பேசுவோம்....