Tuesday 21 January 2014

நா.ச.சு.ம (3) - (டைகர்) கோவிந்தராஜன் (3)

 (டைகர்) கோவிந்தராஜன் (3)

 
பறக்கும் படை அதிகாரி என்னை எழுப்பி பையன்களின் விவரம் சொல்லச் சொன்னதும், என் கையில் இருந்த லிஸ்ட் கொண்டு அவர்கள் பெயரை வாசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் நீங்கள் தான் சம்பத்தா? என்றார். ஆம் நான்தான் சம்பத். பார்த்தல் 43 வயசு போல இல்லை என்று நினைத்தார் போலும். எந்த காலேஜ் படித்தீர்கள், எந்த ஆண்டு என்று கேட்டார். AM Jain, 1975 என்றேன்.  எனக்கும் சம்பத் அவர்களுக்கும் 10வயசு  வித்யாசத்தை மனதில் கொண்டு நான் ஜெயின்-இல் படித்தது 1985  என்றாலும் 1975 என்றேன். ஆனாலும் அவர் விடவில்லை. நீங்கள் ஸ்டேட் டீம் / ரஞ்சி ரெப்ரெசெண்ட் பண்ணி இருகிறீர்களா என்றார். இல்லை எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கவில்லை  அதனால் தான் டீம் மேனேஜர் ஆக செல்கிறேன் என்றேன். எனது பதில் அவருக்கு திருப்தி தந்ததோ இல்லையோ தெரியவில்லை அதோடு அவர் என்னை விட்டு விட்டார், நானும் நிம்மதி பெரு மூச்சு விட்டேன்.
 
 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டெல்லி சென்று அடைந்ததும், நான் முன்பே கேட்டுக்கொண்ட படி எனது நண்பன் டபரா முரளி எங்களுக்கு ரோடக் செல்ல ஒரு வேன் ஏற்பாடு செய்து இருந்தான். வேனில் நாங்கள் ரோடக் சென்று அடைந்தோம். ரோடக் சென்ற பொழுது மணி 4:30 5:00 இருக்கும். பகலிலேயே நல்ல குளிர். எனக்கு வட இந்திய தட்பவெப்பம்  முன்பே பரிச்சயம் என்பதால் வியப்பாக இல்லை. ஆனாலும் உடன் வந்த வீரர்களில் சிலர் பயந்து விட்டனர்.
 
எங்களை அங்கு வரவேற்றது ஒரு சர்தார்ஜி. என்னை நான் அறிமுக படுத்தி கொண்டபின், சர்தார் நாங்கள் தங்கப்போகும் இடத்திற்கு எங்களை அழைத்துச்  சென்றார். நாங்கள் அனைவரும் சென்று சிறிது ஒய்வு எடுத்த பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்களை சந்திக்கச் சென்றேன். அவரிடம் இந்த போட்டிக்கு நாங்கள் பங்கேற்க வந்த செலவு கணக்கு ஒரு தோராயமான மதிப்பீடு செய்து ரூபாய் 85,000/- என்று கொடுத்தேன். எனது தோராயமான மதிபீட்டைப் பார்த்து அவர் புருவம் சுருக்கினார் . எனக்கோ கொஞ்சம் தர்ம சங்கடம் ஆகி விட்டது.  இதுதான் முதல் முறை என்பதால், ஒருவேளை நாம் அதிகமாக சொல்லி விட்டோமோ என்ற எண்ணம் எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அவர்  என்னை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. முஜே மர்வாயகா க்யா ? (என்னை தீர்த்துவிடும் எண்ணமா ?) என் கேட்க எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் எனக்கு புரியவில்லை எனக் கூற, அவர் குறைந்த பட்சம் 1,00,000/- ரூபாய்க்கு மேல் போடவேண்டும் என்றார். நானோ மீண்டும் நல்ல பிள்ளையாய் எங்களுக்கு அவ்வளவு செலவு இல்லையே என்றேன். எனை பார்த்து சிரித்த அவர், அரே தும் பஹுத் சீதா சாதா ஆத்மி ஹோ! (நீ மிகவும் நேர்மையானவனாய் இருக்கிறாய்) உனது வரவு செலவு கணக்கை ஒரு லட்ச ரூபாய்க்கு எழுதி எடுத்து வா என்றார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நாம் மாற்றி எழுதாமல் அவர் நமக்கு பணம் தரப் போவதில்லை. வரும் கூடுதல் பணத்தில் வீரர்களுக்கு ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்து கணக்கை மாற்றி எழுது சமர்ப்பித்தேன். மேற்கொண்டு வந்த பணத்தில் வீரர்கள்  அனைவருக்கு 1000 ரூபாய் சேர்த்துக் கொடுத்தேன். மீதம் இருந்த பணத்தில் பிப் 1, 2013 அன்று அவர்களை டெல்லி-இல் உள்ள ஓர் கேளிக்கை பூங்கா (amusement park) ஒன்றிற்கு அழைத்து சென்று விட்டேன். 4 மணி நேரம் நீங்கள் விளையாடலாம். மாலை 6 மணிக்கு எல்லாரும் இந்த இடத்தில் வந்து சேர வேண்டும் என கூறி அவர்களுக்கு டிக்கெட்-ம் செலவுக்கு தலைக்கு ரூ 200ம் கொடுத்து அனுப்பினேன். பசங்களும் குதூகலமாக ஓ என்று கத்திக் கொண்டு ஓடினர். இரவு ஆறு மணிக்கு அங்கிருந்து கிளம்பி நேரே நியூ தில்லி ரயில்வே நிலையம் வந்தோம். எல்லாரையும் வைத்துக்கொண்டு பசங்களா ஒரு குட் நியூஸ், உங்களுக்கு இன்றைய இரவு சாப்பாடு செலவு என்னுடையது என்று கூறவும் அவர்களுக்கு இன்னும் குஷி ஆகிவிட்டது. பசங்களுக்கு இவ்வளவு செலவு செய்த பின்னும் கையில் ரூ 5000/- மிச்சம் இருந்தது என்றால் எனக்கு எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன். அவர்கள் கொடுத்த பணத்தையும் வரவு செலவு கணக்கையும் எடுத்துக்கொண்டு மறுநாள் TNCA சென்று திரு கும்பட் அவர்களிடம் சமர்பித்தேன். நான் பணம் திருப்பி கொடுத்ததும் திரு கும்பட் திரு விபிஜி-ஐ நோக்கி ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசினார். பிறகு என்னை நோக்கி பணத்தை நீ வச்சுக்கோ கணக்கை அலுவலகத்தில் கொடுத்து விட்டு போ என்றார். நான் விபிஜி அவர்களை பார்த்தேன். அவர் கண்ணால் ஜாடை காட்டி எடுத்துக்கோ என்றார். எனக்கு ஆச்சர்யமாக போனது.

இதெல்லாம் சரி,  நீங்கள் சென்ற மேட்ச் என்ன ஆனது என்று தானே கேட்கிறீர்கள், Points table இதோ.

Vijay Hazare Trophy 1998/99 Table

PWTLNRAPtsNetRR
1Central Zone Under-16s43000171.799
2North Zone Under-16s42010150.303
3East Zone Under-16s4202004-0.204
4West Zone Under-16s4102013-0.659
5
South Zone Under-16s4003011-1.262

நாங்கள் தோற்றதற்கான காரணங்கள் 

1. தட்ப வெப்ப நிலை எங்களுக்கு சாதகமாக இல்லை - நல்ல குளிர் காலம். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி இரவு நேரத்தில் -1, -2 வரை சென்றது. தென் மண்டல வீரர்களால் இதை தாக்குப்  பிடிக்க முடியவில்லை. கை கால்கள் விறைத்து சிறப்பான முறையில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய இயலவில்லை.

2. மற்ற அணி வீரர்கள் வாட்டசாட்டமாக இருந்தனர். பார்ப்பதற்கு 18-19 வயது போல் இருந்தது. நம் அணி வீரர்கள் எல்லாம் நண்டும் சிண்டும் ஆக  இருந்தனர். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த திரு விபிஜி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இதுமட்டும் அல்லாமல்  திரு விபிஜி எனக்கு  2 ஆண்டுகளுக்கு 1997-98, 1998-1999 Kumbat Trophy நிர்வாக குழுவில் இடமளித்தார். மேலும் 1999இல் எனக்கு  Buchi Baabu tournamentஇல் ஆந்திரா டீமின்  local manager ஆக பொறுப்பினை அளித்தார். அங்கு தான் எனக்கு ஜவகல் ஸ்ரீநாத், அணில்  கும்ப்ளே, ராகுல் திராவிட், வேங்கடபதி ராஜு  மற்றும் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோருடைய அறிமுகம் கிடைத்தது.

இத்துடன் மட்டும் அல்லாமல் வேறோர் சந்தர்பத்தில் சச்சின், ஷேவாக், ஷேன் வான் (ஷேன் வானின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ப்ரிஜ் இல் இருந்து பாஸ்டர் டின் பீர் குடித்ததும் ஷேன் எங்களை துரத்தியதும் வேறு கதை). இதை விட முக்கியமாக ஒருமுறை ஜோயல் கார்னெர் (மேற்கு இந்திய கிரிகெட் வீர்ர்) ஐ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதெல்லாம் எனக்கு மறக்க முடியாத மற்றும் கிடைத்தற்கரிய வாய்ப்புகள்.

விபிஜி  ஜெய ஹோ!