Thursday 6 March 2014

டோல்கியென் டூரிஸம்’’



இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் "டோல்கியென் டூரிஸம்’’ என்ற வார்த்தைகள் பிரபலமாகிவருகின்றன. நியூசிலாந்தில் தொடங்கியது இதற்கான அஸ்திவாரம். சுற்றுச் சுழல் ஆர்வலர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது இந்த வகைச் சுற்றுலாக்கள்.

பசுமையின் வனப்பு நிறைந்த நாடு நியூசிலாந்து. இவற்றைக் கண்டு ரசிப்பதற்காக அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் உண்டு. சமீபகாலமாக இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. திடீரென அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் அதிகமாகி விட்டதுதான் காரணம். எப்படி அதிகமானது? புதிய அற்புதக் கட்டுமானங்களா? சமீபத்தில் திறக்கப்பட்ட சரணாலயங்களா? இவை எதுவும் இல்லை. ஓர் ஆங்கிலத் திரைப்படம் தொடக்கி வைத்த விந்தைதான் இது.

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான தி லார்டு ஆஃப் தி ரிங்ஸின் படப்பிடிப்பு நியூசிலாந்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு எங்கெல்லாம் அந்தப் படப்பிடிப்பு நடந்தனவோ, அங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். உதாரணமாக மெளன்ட் ஒலிம்பஸ். நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் ஒரு மூலையில் இருக்கும் இந்த மலையின் ஒரு பகுதி கஹுரங்கி தேசியப் பூங்காவில் உள்ளது. அங்குள்ள பாறைகளில் இயற்கை அற்புதமான வடிவங்களைச் செதுக்கியுள்ளது. இதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படம் வெளியான பிறகு பல மடங்கு அதிகரித்தது.

அதே போல் அந்தப் படத்தில் வரும் குள்ளர்கள் தங்கும் காடாக க்வின்ஸ் டவுனில் உள்ள ஒரு கடற்கரையை ஒட்டிய காடு சித்தரிக்கப்பட்டது. இங்கு முன்பு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பம். ஆனால் இத்திரைப்படம் வெளியான பிறகு அந்த வனப்பகுதிக்கு நிறைய பேர் வரத் தொடங்கி விட்டனர்.

மாசுபடாத இயற்கைச் சுழல் மனிதர்களால் மாசுபடத் தொடங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. வேறொரு காரணமும் சுற்றுச் சுழல் ஆர்வலர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது. பொதுஇடங்களில் படப்பிடிப்பு நடத்தும்போது படக்குழுவினர் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். படப்பிடிப்புத் தளத்தை முன்பு போலவே ஆக்கித் தர வேண்டும் என்னும் நிபந்தனை அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் படப்பிடிப்புக்குப் பிறகு அங்குப் போடப்பட்ட செட், பூங்காவில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை நீக்கிப் பழைய நிலைக் குக் கொண்டுவராமல் அப்படியே விட்டுச் செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர். இதை இந்த அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதைவிட மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்றே சொல்லலாம். காரணம் அவை நீக்கப்படாமல் இருந்தால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. அரசுக்கு வருமானமும் கொழிக்கிறது.

தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் தலச் சுற்றுலாக்கள் என்றே டிராவல் நிறுவனங்கள் நடத்தத் தொடங்கிவிட்டன. படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் அந்தக் கதாபாத்திரங்கள் அணிந்த உடையைப் போன்றே வாடகைக்குக் கிடைக்கின்றன. அவற்றை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் திரையை எட்டிய ‘தி ஹாப்பிட்’ (The Hobbit) திரைப் படத்தின் பல காட்சிகளும்கூட நியூசி லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் தனது சுற்றுலா வருமானம் மேலும் அதிகரிக்குமென்று கருத்துத் தெரிவித்திருக்கினறனர் நியூசி லாந்தின் பொருளாதார நிபுணர்கள்.

அது சரி, இதுபோன்ற சுற்று லாக்களை டோல்கியென் டூரிஸம் என்று ஏன் கூற வேண்டும்? தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் கதையை எழுதியவரின் பெயர் டோல்கியென் எனவேதான் அந்தப் பெயர்.

வாழை இலை

நாகரிக முன்னேற்றத்தால் முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய விஷயங்கள் பலவற்றை இன்றைய இளைய தலைமறையினர் தவறவிடுகின்றனர். அதில் ஒன்று வாழை இலையில் சாப்பிடுவது.

வாழை இலை ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். நல்ல கிருமி நாசினியும்கூட. சுடச்சுட சாப்பாட்டை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதனால்தான் தீக்காயம் அடைந்தவர்களைக்கூட வாழை இலையில் படுக்க வைக்கின்றனர். விஷ உணவுகளை வாழை இலையில் பரிமாறினால், அந்த விஷத்தை வாழை இலை முறித்துவிடும்.

கைக்கு அடுத்து, விருந்தோம்பலுக்கு வாழை இலைதான் பாரம்பரியக் கலாச்சாரம். ஆனால் இன்று வறட்சியால் ஒருபுறம் வாழை இலை மாயமானாலும், நாகரீக மோகத்தால் தலைவாழை சாப்பாட்டை மறந்துவிட்டோம். அதனால் சுகாதாரமும், சுற்றுப்புறமும் மாசு அடைந்துள்ளது.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலிலஅதிகரிக்கிறது. முக்கியமானஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி : 
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமானநோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் செக்ஸுவல்
ஹார்மோன்கள் தூண்டும்.பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.