Thursday 6 March 2014

வாழை இலை

நாகரிக முன்னேற்றத்தால் முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய விஷயங்கள் பலவற்றை இன்றைய இளைய தலைமறையினர் தவறவிடுகின்றனர். அதில் ஒன்று வாழை இலையில் சாப்பிடுவது.

வாழை இலை ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். நல்ல கிருமி நாசினியும்கூட. சுடச்சுட சாப்பாட்டை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதனால்தான் தீக்காயம் அடைந்தவர்களைக்கூட வாழை இலையில் படுக்க வைக்கின்றனர். விஷ உணவுகளை வாழை இலையில் பரிமாறினால், அந்த விஷத்தை வாழை இலை முறித்துவிடும்.

கைக்கு அடுத்து, விருந்தோம்பலுக்கு வாழை இலைதான் பாரம்பரியக் கலாச்சாரம். ஆனால் இன்று வறட்சியால் ஒருபுறம் வாழை இலை மாயமானாலும், நாகரீக மோகத்தால் தலைவாழை சாப்பாட்டை மறந்துவிட்டோம். அதனால் சுகாதாரமும், சுற்றுப்புறமும் மாசு அடைந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்