Friday 18 April 2014

தமிழ் நாட்டில் ஆங்கிலம் பேச வேண்டுமா?


மொழி என்பது ஆளுமையை வெளிப்படுத்த மட்டுமே. தாய்மொழி தெரியாமல் அந்நிய மொழியில் என்னதான் பாண்டித்தியம் பெற்றாலும் அது விழலுக்கு இரைத்த நீர்தான். தமிழ் நாட்டில் எவ்வளவு பேருடன் நீங்கள் ஆங்கிலத்தில் பேச முடியும். எவ்வளவு நல்லாக ஆங்கிலத்தில் பேசமுடியும். வெளிநாட்டவர் பேசும் ஆங்கிலம் நமக்கு புரிவதில்லை. அவர்களும் அதே a to z தான் படிக்கிறார்கள். ஆனால் வித்யாசம் அவர்கள் தங்களது தாய் மொழியில் படிக்கிறார்கள் நாமோ அயல் மொழியை தாய் மொழியாக பாவித்து படிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஹிந்தி எதிர்ப்பு என்று ஒரு இயக்கம் 40 ஆண்டுகள் முன்பு தொடங்கப் பட்டது. இந்தியா முழுவதும் ஹிந்தி பேசப் படுகிறது. நம் தமிழ் நாட்டில் மட்டுமே ஹிந்தி எதிர்ப்பு. அண்டை மாநிலங்களில் ஹிந்தி பேசப் படுகிறது இங்கு மட்டுமே தமிழை அரசியல் ஆக்கி தமிழ் குடிமக்களை பலிகடா ஆக்கி விட்டனர். ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய மொழி என்று உண்டு. அதைதான் அனைவும் பேசுவர். நாம் தேசிய மொழியை கற்க இயலாமல் போனதால் நமக்கு ஆங்கிலத்தின் உதவி தேவை படுகிறது. நான் இந்தியா முழவதும் சுற்றியிருக்கிறேன். எங்குமே எனது ஆங்கிலம் உதவ வில்லை. நான் கற்ற ஹிந்தி எனக்கு பலமாக இருந்திருக்கிறது. ஸ்டார் ஹோட்டல் முதல் பிசினஸ் மீடிங்க்ஸ் வரை எனக்கு முழுதும் ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆங்கிலம் என்பது எனது ஆளுமையை வெளிப்படுத்த நான் உபயோகிக்கும் ஒரு கவசம் மட்டுமே. எதிராளி ஆங்கிலத்தில் பேசும் பொழுது நீங்கள் ஹிந்தியிலோ தமிழிலோ பதில் சொல்லுங்கள். அவர்கள் தானாகவே உங்கள் மொழியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். மேலும் ஆங்கிலம் கற்பது என்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஆனால் தமிழ் புலமை என்பது எல்லோருக்கும் கை வருவது இல்லை. நமது மொழி தெரியாதவர்கள் - அயல் நாட்டினர் இடம் மட்டுமே ஆங்கிலத்தில் பேச வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்