Friday 18 April 2014

வெற்றி

தோல்வி கண்டு நான் துவளுவதில்லை
தோல்விகள் எனக்கு தோழிகள் போல
என் பலவீனத்தை எனக்கு உணர்த்தி
என்னை மேலும் பலமூட்டுகின்றன
என் தோல்விகளுக்கு நானே பொறுப்பு
யார்மீதும் எனக்கில்லை வெறுப்பு
வலிகள் பல நான் அடைந்தாலும்
வெற்றி நோக்கியே பயணிக்கிறேன்
வெற்றி ஒருநாள் வசப் படும்
வலிகள் அன்று மறக்கப் படும்

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்